Home தென்னிலங்கைச் செய்திகள் மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் மல்வத்து ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் மல்வத்து ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Share
Share

மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று தந்திரிமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இளைஞர் உறவினர்களுடன் இணைந்து மடு மாதா தேவாலயத்துக்குச் சென்றுள்ள நிலையில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது நீராடுவதற்காக மல்வத்து ஓயாவுக்குச் சென்றுள்ளார்.

மேற்படி இளைஞரும் உறவினர்களும் இணைந்து மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்  ஆவார்.

இது தொடர்பில் தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...