Home தாயகச் செய்திகள் பொலிஸார் எதிர்ப்பையும் மீறி தையிட்டியில் திரண்டு மக்கள் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பொலிஸார் எதிர்ப்பையும் மீறி தையிட்டியில் திரண்டு மக்கள் போராட்டம்!

Share
Share

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்.பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்கு செல்ல விடாது, பேருந்தில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...