நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன.
கைதாகும் 100 பேரில் 98 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த கலாசாரத்தை அரசமைப்பு திருத்தம் ஊடாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட பணிமனையில் நேற்று நடத்திய
செய்தியாளர் சந்திப்பி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், ‘யாராவது ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அது தண்டனையாக கருதப்படுவதில்லை என அரசமைப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நாட்டில் யாராவது கைதுசெய்யப்பட்டால் தண்டனையாக அவருக்கு கை விலங்கிடப்பட்டு, அரசியல் கண் காட்சி இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நடவடிக்கை உலக நாடுகளில் மாற்றமாகும். இந்தியா, ஜப்பான், அமெரிக்க அரசமைப்பில் இந்த உறுப்புரை இதனைவிட மாற்றமானதாகும்.
ஜப்பானில் விசாரணை மேற்கொண்டே கைதுகள் இடம்பெறுகின்றன. 100 பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98 பேர் குற்றவாளியாகின்றனர்.
ஆனால், இலங்கையில் 100 பேரை கைது செய்து விசாரித்தால் 98பேர் குற்றமற்றவர்களாக வீடு செல்கிறார்கள்.
இதனால் இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால் அரசமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. விசாரணைகளை பலப்படுத்த வேண்டியிருக்கிறது.
விசாரணைகளின் அறிக்கையின் பிரகாரமே நீதிமன்றம் செயல்படுகிறது. நாட்டில்,
இது தொடர்பான புள்ளிவிவரங்களை பார்த்தால், 100 பேர் கைதுசெய்யப்பட்டால், இருவர் குற்றவாளியாகின்றனர்.
98 பேர் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர். அதனால் நாட்டில் கைதுகள் அரசியல் கண்காட்சி ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசியல் கண்காட்சியை எதிர்காலத்தில் அரச மைப்பு உறுப்புரைகளில் திருத்தம் மேற் கொண்டு இல்லாமலாக்க வேண்டும் என்றார்.
Leave a comment