தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அங்குணகொலபெலஸ்ஸவில் 175 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.
நேற்று மத்தளவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சிறிய வானின் பின்புற டயர் வெடித்து வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் வானில் 6 பேர் இருந்தனர், காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்தவர்கள் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a comment