புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது. இதனால் தான் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த அனைவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
முன்னர் பாதாள உலக கும்பல்களுக்கு பல அரசியல்வாதிகள் துணைபுரிந்தனர்.எனவே தான் பாதாள உலக கும்பல்கள் எமது நாட்டில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டு பலத்துடன் இருந்தனர்.
ஆனால் புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது.
பாதாள உலக கும்பல்களை கைதுசெய்ய புதிய அரசாங்கம் பொலிஸாருக்கு பல உதவிகளை வழங்கியது.
பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை தாண்டி இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் காலங்களிலும் இந்த கைது நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
Leave a comment