முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
Leave a comment