பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு நீதியமைச்சினால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.இதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும்.அதன் பின்னர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும்
Leave a comment