Home தென்னிலங்கைச் செய்திகள் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரால் நிராகரிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரால் நிராகரிப்பு!

Share
Share

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் அவநம்பிக்கை பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று தெரிவித்தார்.

இந்தப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 32 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி, அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த விடயத்தை கவனமாக ஆராய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமது முடிவை அறிவிக்கும்போது அரசியலமைப்பின் 42, 43 மற்றும் 44 வது பிரிவுகளை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இவை கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பை அமைச்சரவை அமைச்சர்கள் மீது வைக்கிறது.

ஒரு பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அமைச்சரவை உறுப்பினர் அல்ல என்றும், அவர் நேரடி அரசியலமைப்பு பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கம் , பிரதமர் அல்லது தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மட்டுமே அவநம்பிக்கை தீர்மானங்களை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்பதை சபாநாயகர் வலியுறுத்தினார்.

பிரதி அமைச்சர்களுக்கு அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை, பிரித்தானியா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிற பொதுநலவாய ஜனநாயக நாடுகளிலும், அத்தகைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான “விரும்பத்தகாத முன்னுதாரணத்தை” உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை தீர்மானத்தை “தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சபாநாயகர் அறிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.  இதற்கு அமைய...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது,...

ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4...

கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று...