Home தாயகச் செய்திகள் பழைய பூங்காவில் விளையாட்டரங்க பணிகளை நிறுத்துமாறு நீதிமன்று தடை உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பழைய பூங்காவில் விளையாட்டரங்க பணிகளை நிறுத்துமாறு நீதிமன்று தடை உத்தரவு!

Share
Share

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை கட்டளை வழங்கியுள்ளது.

குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி, அதில் உள்ளக விளையாட்டரங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில், அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக்கூடாது
என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில், பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கை உடனடியாக நிறுத்துமாறு கோரி வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கின் மீதான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, விளையாட்டரங்கு அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு, 14 நாட்களுக்கு இடைக்கால தடை கட்டளையை வழங்கிய மன்று, எதிர்த்தரப்பினை தமது ஆட்சேபனைகள், பதில்களை முன் வைக்கவும் காலம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...