Home தென்னிலங்கைச் செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர அநுர அரசு திட்டம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர அநுர அரசு திட்டம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு!

Share
Share

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதைவிடவும் மிகவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதே அரசின் திட்டமாக உள்ளது.”

– இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மறந்துவிட்டே அரசு செயற்படுகின்றது. ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் பற்றி அதிகளவில் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறு செயற்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும், அதைவிட மிகவும் பாரதூரமான சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கே ஆளுங்கட்சி முற்படுகின்றது.

மன்னாரில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது சிறிய நேபாளமாக மன்னார் மாறியுள்ளது. இவ்வாறான மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதாக இருந்தால் ஆளுங்கட்சிக்கு அடக்குமுறை என்பது அவசியம். அதனால்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர முற்படுகின்றனர்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சி மௌனம் காக்கின்றது. எல்லை நிர்ணய விவகாரத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....