தினமும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கி இருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தக் குழு இன்னும் தகவல்களைச் சேகரித்து வருகிறது.
அடுத்த மாதம் 4 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதால், அடுத்த மாதம் 4 ஆம் திகதி அறிக்கை கிடைத்தால், அந்த திகதிக்குள் சேகரிக்கப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை சுமார் 16 மில்லியனாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
Leave a comment