2025 மே மாதத்தில் -0.7% ஆக பதிவான நாட்டின் பிரதான பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -0.6% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தகவல்களுக்கு அமைவாக, ஜூன் மாதத்துக்கான உணவுப் பணவீக்கம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.
இது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்தது.
மேலும், உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் -2.8% ஆக அதிகரித்தது.
இது 2025 மே மாதத்தில் -3.3% ஆக இருந்தது.
Leave a comment