Home தென்னிலங்கைச் செய்திகள் நீதிமன்ற அவமதிப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் குடிவரவு – குடியகல்வு நாயகம்!
தென்னிலங்கைச் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் குடிவரவு – குடியகல்வு நாயகம்!

Share
Share

இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (1) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து, இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான தண்டனை ஜூலை 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...