“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது. இது தொடர்பில் அரசிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்.” – இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்க வேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில் நிறைவேற்று அதிகாரத்துக்கு உரிய தேவை இலங்கையில் உள்ளது. அந்த அதிகாரம் இல்லாவிடில் அரசின் இருப்பு ஆட்டம் கண்டுவிடும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு இது தொடர்பில் மறுபரிசீலனையில் ஈடுபடலாம்.” – என்றார்.
Leave a comment