நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை திருத்தியமைப்பது தொடர்பில் அவதானிப்புக்கள், கருத்துக்கள், பரிந்துரைகளை தமக்கு அனுப்பிவைக்குமாறு நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவின் செயலாளர் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் உள்ளடங்கலாக பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து அக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள பொது அறிவித்தலில் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துதல் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, இலக்கம் 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10 எனும் முகவரிக்கோ அல்லது டநபயடளூஅழத.பழஎ.டம என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பு வெளியானதன் பின்னர் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய அலுவலகத்துக்கான உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்று செய்யப்பட்டுள்ளது.
அப்பதிவில் ‘2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பொது அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியறுத்தி நாம் எமது நிலைப்பாட்டை அனுப்பிவைத்துள்ளோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment