Home தாயகச் செய்திகள் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!

Share
Share

யாழ். நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கானது தீர்ப்புக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது.

சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் அந்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இருப்பினும் நீதிவான் இன்று விடுமுறையில் இருந்த காரணத்தால் வருகின்ற ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

டிப்பர் மோதி கிளிநொச்சியில் தனியார் வங்கி பெண் ஊழியர் மரணம்!

கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் இன்று வியாழக்கிழமை (31) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி...

வீதியை கடக்க முற்பட்டவரை மோதியது மோட்டார் சைக்கிள்; யாழில் முதியவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில்...

மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகல்!

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி,...

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்பாம்பு தீண்டி உயிரிழந்தார். புத்தூர் மேற்கில்...