நாடாளுமன்றம் இன்றைய தினம் விசேட அமர்வுக்காக கூடுகிறது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நாடாளுமன்றம் கூடுகிறது என்று நாடாளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இன்று பாராளுமன்றம் கூட்டப்படுகிறது.
நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
Leave a comment