நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்துக்குள் இராணுவ வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், விசனமும் வெளியிட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஆலய முகப்பு வீதியில் இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தது. இராணுவத்தினரின் இந்த செயலால் அங்கிருந்த பக்தர்கள் விசனமடைந்தனர்.
இதனிடையே, இராணுவத்தின் இந்த செயல்பாட்டுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேசமயம், கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பிக்கு ஒருவர் இராணுவ வாகனத்தில் ஆலய சுற்றாடல் பகுதிக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment