Home தாயகச் செய்திகள் நல்லூரான் கொடியேற்றம் நாளை!இன்று கொடிச்சீலை கையளிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூரான் கொடியேற்றம் நாளை!இன்று கொடிச்சீலை கையளிப்பு!

Share
Share

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காகச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன்படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்து கொடிச்சீலை நல்லூர் ஆலயப் பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய மகோற்சவக் கொடியேற்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறும்.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெற்று, மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

செம்மணியில் மேலும் 03 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று திங்கட்கிழமை புதிதாக 03...

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்,...

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...