Home தென்னிலங்கைச் செய்திகள் தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்குள் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.

ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்துக்குள் நுழையுமாறு மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.” – என்றார்.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வந்தால் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போக்குவரத்து சட்டம் கடுமையாக்கப்படுகிறது!

போக்குவரத்து சட்டம் நேற்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை...

சகோதரனின் வீட்டுக் கூரையிலிருந்து வீழ்ந்த நபர் மரணம்!

சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மானிப்பாயைச் சேர்ந்த...

யாழில் டெங்கு கட்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய...

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அந்தச்...