Home தாயகச் செய்திகள் தெல்லிப்பளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தெல்லிப்பளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

Share
Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில் இந்த மரணத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து, ஒருவர் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

அவர் வழங்கிய வாக்குமூலத்தில், நேற்றிரவு பட்டா ரக வாகனத்தை பின்பக்கமாகச் செலுத்தியபோது, குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், உடலம் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

எனவே குறித்த உடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற...

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு...

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது....