தென்னிலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாத்தறை, கபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், வீடொன்டறின் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 48 வயதுடைய நபர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர்களை அடையாளம் காண மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Leave a comment