Home தென்னிலங்கைச் செய்திகள் தென்னக்கோனுக்கு பிணை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தென்னக்கோனுக்கு பிணை!

Share
Share

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்தார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி தேசபந்து தென்னக்கோன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தேசபந்து தென்னக்கோனின் முன்பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மிரிஹான பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை...