விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும் என்று திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந் தொட்ட நந்தாராம தேரர் குறிப்பிட்டார்.
தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரருக்கு
அமரபுர சிறீ கல்யாண வங்ச நிகாய உத்தரலங்கா உப பிரதான சங்கநாயக்க பதவி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர்,
திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்னை தோற்றம் பெறாத வகையில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக அமையும். சகல பிரச்னைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக் கும். இந்த பிரச்னைக்கு இருதரப்பு பேச்சு ஊடாக தீர்வு காணவேண்டும்.
விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும். திஸ்ஸ விகாரையை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான முரண்பாடுகள், பிரச்னைகள் தோற்றம் பெறுவது முறையற்றது. இதற்கு உரிய தலைமைத்துவத்தின் ஊடாக பேச்சுகளை மேற்கொண்டு முரண்பாடற்றவகையில் தீர்வு காணவேண்டும் ;- என்றார்.
Leave a comment