Home தாயகச் செய்திகள் திருமலை 5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு; மகனின் பிறந்த தினத்தில் சோகம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

திருமலை 5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு; மகனின் பிறந்த தினத்தில் சோகம்!

Share
Share

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை  காலமானார்.

அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும். மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள...

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...