Home தாயகச் செய்திகள் திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

Share
Share

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறிய வேளை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருகோணமலை, மடத்தடி – கிருஷ்ணர் ஒழுங்கையைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த இளைஞருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான பழைய தகராறுதான் இந்த மோதலுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தப்பட்டு இறந்தவரின் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் காணப்படுகின்றது.

திருகோணமலை பொலிஸ் பிரிவு பதில் உதவி அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தலைமையிலான தலைமையகப் பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...