Home தென்னிலங்கைச் செய்திகள் தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றுகின்றது அநுர அரசு – சஜித் அணி விசனம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றுகின்றது அநுர அரசு – சஜித் அணி விசனம்!

Share
Share

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அநுர அரசு, இன்று ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் அவ்வாறே செயற்பட்டுள்ளது. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அநுர அரசு இன்று விசாரணைகளை நிறைவு செய்வது இலகுவானதல்ல எனக் குறிப்பிடுகின்றது.

இதேவேளை வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான பழியை ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கஜ்ஜா என்ற நபர் மீது சுமத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கஜ்ஜா என்பவரது மகன் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து மேலும் பல முக்கிய விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார்.

தாஜூதீன் விவகாரத்தைப் பொலிஸ் ஊடாகப் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு அரசு முயற்சித்த போதிலும், தற்போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வாகன இறக்குமதி வருமானத்தை அடுத்த வருடம் 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க...

போதைக் கும்பலின் செயற்பாடுகள் அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன – ஜனாதிபதி அநுர!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...