தலை மற்றும் கை, கால்கள் இல்லாத ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரவில, முதுகடுவ கடற்கரையில் இன்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
சடலம் ஹலவத்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் ஆணுடையது என்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment