செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த வழக்குத் தவணையின்போது மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பட்ஜட்டை சமர்ப்பிக்குமாறும், நிபுணர்களின் இடைக்கால அறிக்கையையும் நீதவான் கோரியிருந்தார்.
இந்த விடயங்கள் எதிர்வரும் வழக்குத் தவணையின்போது முன்வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறும் முதலாவது நீதிமன்ற நடவடிக்கை என்பதாலும், எதிர்வரும் வழக்குத் தவணையில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
Leave a comment