“செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Leave a comment