Home தாயகச் செய்திகள் செம்மணி எலும்புக் கூடுகள்; AI புகைப்படங்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணி எலும்புக் கூடுகள்; AI புகைப்படங்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை!

Share
Share

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் எலும்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (Al) புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அதை மீறிப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் எலும்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவுப் படங்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் பரப்பப்படுகின்றன.

இப்படியான பிழையான படங்கள் பகிரப்படுவது குற்றவியல் விசாரணைகளுக்கு இடையூறு செய்வதோடு, உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்படலாம் எனவும், இந்தப் புதைகுழியைத் தவறான விதத்துக்குக் கொண்டுசெல்ல ஓர் உக்தியாக இதனைக் கையாளுகின்றனரா எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, குறித்த போலியான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பகிர்பவர்கள் மீது, நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

ஆகவே, சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...