யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாள்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
அதற்கமைய இதுவரையில் 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 235 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
Leave a comment