Home தாயகச் செய்திகள் செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணியிலிருந்து 05.00 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சான்றுப்பொருட்களைக் காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொதுமக்களுக்குச் சான்றுப்பொருட்களைக் காண்பிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு:-

  1. மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாகக் காணப்படுவதால் கண்ணியம், அந்த நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.
  2. காணாமல்போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
  3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்), முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.
  4. இருபத்தொரு (21) வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்
  5. பங்குபற்றும் நபர்கள் மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.
  6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல்போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.
  7. பங்குபற்றும் நபர்கள் காண்பிக்கப்படும் சான்றுப்பொருட்களைக் கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.
  8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்த நடவடிக்கை நடைபெறும் வேளையில், சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம்,...

சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை...

583 கிலோ பீடி இலைகளுடன் கைப்பற்றப்பட்ட டிங்கிப் படகு!

இலங்கைக் கடற்படையினர் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குக்...

பஸ் விபத்தில்42 பேர் காயம்!

கேகாலை -அவிசாவளை வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில்...