Home தாயகச் செய்திகள் செம்மணியில் இதுவரை 118 என்புத் தொகுதிகள் அடையாளம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 118 என்புத் தொகுதிகள் அடையாளம்!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று மூன்று மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை மொத்தமாக 105 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...