1956 ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பெண்கள், இளைஞர்கள் மற்றும் 16வயதுக்குக் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்தும் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அபராதங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை பணிக்கு அமர்த்துதல் தொடர்பாக தொழில் வழங்குநர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நபர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்தை அச்சுறுத்தும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தில் 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம், அச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தவறிழைக்கின்ற நபரொருவர், அதிகபட்சமாக 10,000 ரூபாய் அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை ஆகிய இரண்டில் ஒரு தண்டனையையோ அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
இத்தோடு இன்னலுற்ற பிள்ளைக்கு இழப்பீடும் விதிக்கப்பட்டன.
இதன்படி, இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயங்களுக்கு அமைய 138 மற்றும் 182க்கு ஏற்ப அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Leave a comment