யாழ்ப்பாணம் – சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாவது அமர்வில், மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றன.
புதிதாக 05 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் 20 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக இதுவரையில் 85 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் 67 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், உடைந்த காப்பு உள்ளிட்ட சில சான்று பொருட்களும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Leave a comment