அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
இதேநேரம், 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அரியாலை – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது பகுதியாக 36ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் நடைபெற்றன.
ஏற்கனவே, 169 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 8 எலும்புக் கூடுகள் புதிதாக கண்டறியப்பட்டன.
இதனால், அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்தது.
இதேபோன்று, நேற்றைய தினம் 6 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
Leave a comment