Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றும் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை 37 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 30 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...