Home தாயகச் செய்திகள் சாவகச்சேரியில் விபத்து! இளைஞர் மரணம்! பெண் படுகாயம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சாவகச்சேரியில் விபத்து! இளைஞர் மரணம்! பெண் படுகாயம்!

Share
Share

சாவகச்சேரி – நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இந்த விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மீசாலை வடக்கு, புத்தூர் சந்தியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...