தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
22 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஷீந்திர ராஜபக்ஷ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment