முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான செவனகல பகுதியில் உள்ள கட்டடமொன்று சேதமாக்கப்பட்டமைக்கு, இழப்பீட்டை பெறும் செயற்பாட்டின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Leave a comment