Home தாயகச் செய்திகள் சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

Share
Share

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க
வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புதிய சட்டமூலம் குறித்த கவலை தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்புச் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வ
தேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு மற்றும் நல்லிணக்கம் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டாலும், அந்தச் செயல்முறை மிகவும் மந்த கதியில் உள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைத்துச் சமூகங்
களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள எலினோர் சாண்டர்ஸ், இது நல்லிணக்கத்துக்கு மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் கள யதார்த்தமும் நிலைமாறுகால நீதி, இனவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளைக் குழு கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், களத்தில் அதன் முடிவுகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள ‘சுயாதீன அரச வழக்குதொடுநர் அலுவலகம்’ வெறும் பேச்சளவில் இன்றிச் செயற்பாட்டுக்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோதல் காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள குழு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நீதி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளது.

ஜூன் மற்றும் செப்டெம்பர் கூட்டத்தொடர்களிலேயே இலங்கை குறித்த விரிவான
எழுத்துபூர்வ அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால், மார்ச் மாதம் நடைபெறும் இந்த 61ஆவது கூட்டத்தொடரில், இணை அனுசரணைக் குழு ஒரு ‘வாய்மொழி மூல அறிக்கை’யைச் சமர்ப்பித்துள்ளமையானது, இலங்கையைச் சர்வதேசக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கச் சர்வதேச சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பதைக் காட்டுகின்றது.

விவாதங்கள் இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு கூட்டத்தொடரில், இவ்வாறானதொரு விரிவான மற்றும் விமர்சன ரீதியான அறிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரதான கூட்டத்தொடருக்கான ஒரு ‘முன்னெச்சரிக்கை
அறிவிப்பாகவே’ கருதப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...