அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்கக் குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள், 119 எனும் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டைப் பார்வையிட்டனர்.
குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்த சம்மாந்துறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment