Home தென்னிலங்கைச் செய்திகள் சஜித் மீதான தடையை நீக்கியது ஐ.தே.க!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சஜித் மீதான தடையை நீக்கியது ஐ.தே.க!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது எனக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நடவடிக்கை ஒற்றுமையை நோக்கி எடுக்கப்பட்ட முதல் படி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
 
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...