சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மானிப்பாயைச் சேர்ந்த சிவநாயகம் சுவீஸ் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் கடந்த 3ஆம் திகதி சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்வதற்கு சென்றுள்ளார்.
அங்கு கூரை வேலை யில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
Leave a comment