கொழும்பு, மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜிட் வீதியில் இன்று பகல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த இளைஞரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜிட் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ரி – 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment