Home தென்னிலங்கைச் செய்திகள் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணை அனுமதியும் கிடைத்தது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணை அனுமதியும் கிடைத்தது!

Share
Share

போலி மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நேற்று கையளிக்கப்பட்டது.

நீண்ட விளக்கத்தின் பின்னர் பிரதிவாதிகள் 12 பேரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மற்றும் ட்ரிபொப்சிமெப் என அடையாளப்படுத்தி மருந்து அல்லாத வேறு திரவங்கள் அடங்கிய 6 ஆயிரத்து 195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு  வழங்கி இலங்கை அரசின் ஆயிரத்து 444 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் கையாள்வதற்குச் சதித்திட்டம் தீட்டியமை, குறித்த நிதியைத்  தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிரச்சினைக்கு வித்திட்டுள்ள மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக்க பெர்னாண்டோ, மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் கபில விக்கிரமநாயக்க, மருத்துவ விநியோகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஷாந்தினி சொலமன், மருத்துவ விநியோகப் பிரிவின் கணக்காய்வாளர் நெரான் தனஞ்சய, மருத்துவ விநியோகப் பிரிவின் மொத்த கையிருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜீத் குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஸ்ரீ சந்திரகுப்த, மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேரத் முதியான்சேலாகே தர்மசிறி ரத்ன குமார ஹேரத், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவரச பெறுகை செயன்முறையின் பெறுகை குழு உறுப்பினர் டாக்டர் ஜயநாத் புத்பிட்டிய, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சமன் ரத்நாயக்க, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளரான டாக்டர் அரம்பேகெதர துசித்த சுதர்ஷன மற்றும் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் விஜித்குணசேகர ஆகியோர் இந்த  வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை சிறிய லொறியில் நேற்று கொண்டு வந்திருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியான சுதத் ஜானக்க பெர்னாண்டோ என்பவரைச் சிறைச்சாலைகள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கின் 9ஆவது பிரதிவாதியான மருத்துவ விநியோகப் பிரிவில் கடமையாற்றிய ஜயனாத் புத்பிட்டிய என்ற வைத்தியர் திறந்த நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை என்பதுடன் மேற்படி பிரதிவாதி வௌிநாடு சென்றுள்ளார் என்று அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதையடுத்து அனைத்து பிரதிவாதிகளுக்கும் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம, பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்க சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார்.

“வழக்கின் தன்மை மற்றும் வழக்கு தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பத்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்க எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். நீதிபதி அவர்களே, பிரதிவாதிகளுக்கு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தாலும் பிணை சட்டத்தின் பிரகாரம் இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்குவதற்கு குறிப்பிடத்தக்க முக்கிய காரணங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளது.” – என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனூஜ பிரேமரத்ன, நலின் லத்தூவஹெட்டி, பிரியந்த நாவான மற்றும் சரத் ஜயமான்ன ஆகியோர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு பிரதிவாதிகளுக்காக தனித் தனியாகப் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

நீதிவான் நீதிமன்றத்தில் குறிப்பிடத்தக்க விசேட காரணங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதால் பிரதிவாதிகளை இந்தச்  சந்தர்ப்பத்தில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க வேண்டிய தேவையில்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் நாட்டு மக்களையும் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதால் நியாயமான வழக்கு விசாரணையை நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம இதன்போது குறிப்பிட்டார்.

நீதிவான் நீதிமன்றத்தில் பிணை அனுமதி பெறுவதற்காகப் பிரதிவாதிகள் முன்வைத்த விடயங்கள் தற்போது செல்லுபடியாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட விளக்கத்தின் பின்னர் பிரதிவாதிகள் 12 பேரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...