வீட்டின் கூரையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கோப்பாய் தெற்கை சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த இளைஞர் கடந்த 12ஆம் திகதி வீட்டின் கூரையை சீர்செய்வதற்காக அவர் மேலே ஏறியுள்ளார். அப்போது, ‘சீற்’ உடைந்து அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Leave a comment