குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் (Cable car) அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ரஷ்ய துறவிகள் இருவரும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் மதகுருமார்கள் 13 பேர் பயணித்துள்ளனர்.
Leave a comment