Home தென்னிலங்கைச் செய்திகள் கிழக்கு மாகாணத்தில் இஸ்ரேலியர்கள் போதைப்பொருள் விற்பனை – ஆங்கில ஊடகம் தகவல்!
தென்னிலங்கைச் செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் இஸ்ரேலியர்கள் போதைப்பொருள் விற்பனை – ஆங்கில ஊடகம் தகவல்!

Share
Share

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் வரும் சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை விற்பனை
செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுலா அதிகாரிகளுடன்
பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வெளிநாட்டினர் இரவு விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்ற வணிக முயற்சிகளை நிறுவியுள்ளனர்.

இஸ்ரேலியர்களின் இலங்கை சகாக்களின் பெயர்களில் இவை இயங்குகின்றன. சட்ட விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு மறைப்பாக உள்ளூர்வாசிகள் இதில்
ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில்
பிரிவில் உள்ள அறுகம்பை உல்லா கோமாரி மற்றும் பனாமா போன்ற பகுதிகளிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன என சுற்றுலாத்துறை குறித்து நன்கறிந்த
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெளிநாட்டினர் தங்கள் சேவைகளை மற்ற சக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். மேலும் ஈட்டப்படும் வருமானம் உண்டியல் போன்ற கட்டுப்பாடற்ற பணப் பரிமாற்ற முறைகள் மூலம் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

இதன் விளைவாக இலங்கைக்கு சுற்றுலாவிலிருந்து முறையான வருவாய் மறுக்கப்படுகிறது.

வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள மூடிய சமூக ஊடகக் குழுக்கள்
மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இடங்களில் போதைப்பொருள்
விற்பனை செய்யப்படுகிறது.

இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான சுற்றுலா நடைமுறைகள் பாதிப்பு
குறித்து குறித்து கவலைகளை எழுப்புகிறது என சுற்றுலாத்துறை குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வலையமைப்புகள் டிஜிற்றல் முறையில் இயங்குவதாலும் ஏற்கனவே சுற்றுலாப்
பயணிகளாக இருக்கும் வாடிக்கையாளர்களின் நெருக்கமான குழுவிற்கு சேவை செய்வதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வயமைப்புகளை அகற்றுவது கடினமாகக் கண்டறிந்துள்ளனர்.

சட்டவிரோதமாக வணிகங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் உணவட்டுன மற்றும் வெலிகம போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் ரக்ஸி சேவைகளையும் வழங்குகிறார்கள். முன்னதாக இஸ்ரேலியர்கள் கொழும்பு வெலிகம மற்றும் எல்ல ஆகிய இடங்களில் யூத மத மையங்களாக இருக்கும்மூன்று சபாத் ஹவுஸ்களை நடத்துவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மத வழிபாட்டுத் தலங்களைக் கையாளும் இலங்கைச் சட்டத்தில் பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து தொடர்பான விதிகள் உள்ளன.

ஆனால் யூத மதம் தொடர்பான விதிகள் இல்லை.

இதன் விளைவாக புத்தசாசனம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் நாட்டில்
உள்ள யூத மத இடங்களை நேரடியாகக் கையாள முடியாது என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைக்கான புதிய அமெ. தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை...

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – வீரவன்ச கேள்வி!

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று...

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணமாகிறார்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும்...

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...